பொள்ளாச்சி இளைஞன் ஒருவனால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதன்பின் கல்லூரி மாணவி பாலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.ஆனால் பாலன் திருமணம் செய்து கொள்ள மனம் ஏற்காமல் ஒன்றும் சொல்லாமல் தலைமறைவாகியுள்ளார் .
இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனையடுத்து தகவலறிந்த கிருஷ்ணகிரி பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதன்பின் விசாரணை நடத்தி மாணவியை ஏமாற்றிய பாலன் மீது நம்பிக்கை மோசடி கொலை மிரட்டல் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலாவை தேடி வருகின்றனர்.