Categories
தேசிய செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி… அலைமோதிய கூட்டம் … அள்ளிச் சென்ற பொதுமக்கள்…!!!

மேற்கு வங்காளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், சாலையில் கொட்டிய சோப்பு மூலப்பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் சோப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அசன்ஹால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த சோப்பு மூலப்பொருட்களின் முழுவதும் சாலையில் கொட்டின. அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த விபத்து பற்றி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையில் கொட்டி கிடந்த சோப்பு மூலப் பொருட்களை அகற்றினர். அதுமட்டுமன்றி சோப்பினால் வாகனங்கள் வழுக்கி விபத்து ஏற்படாமல் இருக்க ஓங்கு மணல் தூவப்பட்டது. அதுமட்டுமன்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு வந்து சோப்பு மூலப்பொருட்களை பாத்திரத்தில் அள்ளிச் சென்றார்கள்.

 

Categories

Tech |