அதிபர் ட்ரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ள வார்த்தை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் ஜனாதிபதியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஏற்று கொள்ளாமல் “இந்த அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” என்று ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் இதுபோன்று தேர்தல் சம்பந்தமான தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “அதிபர் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவரும். நாங்கள்தான் இந்த தேர்தல் வெற்றி பெறுவோம். இதனால் அமெரிக்காவை சிறந்த நாடாக நாங்கள் உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அமெரிக்காவிலுள்ள மக்கள் பலரும் இவர் “நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று பதிவிட்டுள்ளாரே? இவர் தேர்தலில் வெற்றி பெறுவதை சொல்கிறாரா? அல்லது வேறு எதுவுமா ?என்பது புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.