Categories
உலக செய்திகள்

உலகிற்கே கிறிஸ்துமஸ் பரிசு…! ”பிரிட்டன் மகிழ்ச்சியான அறிவிப்பு”… கொண்டாட போகும் உலக மக்கள் …!!

கொரோனா தடுப்பூசியை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க போவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இன்னும் மூன்று வாரங்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடு தன்னுடைய உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மாற் ஹான் கொக், முயன்றவரை விரைவாக இந்த தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் பொறுமையுடன் இருக்குமாறு கூறியுள்ளார். உலக அளவில் கொரோனா தொற்றுகளில் மொத்த எண்ணிக்கையானது, இன்றைய நிலவரப்படி பார்த்தால் 5 கோடியை தூண்டியுள்ளது. அதில் 12 லட்சத்து 55 ஆயிரத்து 803 பேர் மரணமடைந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் மட்டுமே ஒரு கோடி மக்களுக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுப்பாடை இழந்து கடந்து செல்லும் நிலையில், தற்போது ஐரோப்பாவில் 30,5700 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளையொட்டி, கிறிஸ்துமஸ் பரிசாக இன்னும் மூன்று வாரங்களில் தடுப்பூசி கிடைக்கும் என்று மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த முதலாவது கொரோனா தடுப்பூசி அதை செலுத்தும் மக்களிடம் 90 சதவீதத்துக்கு மேல் வெற்றிகரமாக பலன் அளிக்கும் என அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆர்.என்.ஏ தடுப்பூசி எனப்படும்  இந்த தடுப்பூசியானது பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |