நான் விவசாயி என்று ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய முதலமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது.
நான் முதலமைச்சராக இருக்கும் போதிலும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் சிறு வயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்று என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.