Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… கொரோனா பரவும் அச்சம்… முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய முதலமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது.நான் முதலமைச்சராக இருக்கும் போதிலும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் சிறு வயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்று என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அதுமட்டுமன்றி சிகிச்சைக்கு தேவையான மாத்திரைகள் போதுமான அளவு உள்ளன. தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறந்தால் அதிக அளவு கொரோனா பரவும் என்று சிலர் அச்சப்படுகிறார்கள். பெற்றோர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும். ஒரே வருடத்தில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |