Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இத மட்டும் வாங்குங்க, வேற ஒண்ணுமே வேணாம்… குடும்பமே அவ்ளோ சந்தோசப்படுவீங்க…!!!

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு சிவகாசியிலிருந்து புத்தம்புது பட்டாசுகள் குவிந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.

நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. அனைத்து கடை வீதிகளிலும் பொருள்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் அங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம்புது பட்டாசுகளை அறிமுகம் செய்து விற்பனை செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு திருப்பூருக்கு ஏராளமான புத்தம்புது பட்டாசுகள் விற்பனைக்காக வந்துள்ளன. அவ்வாறு சோனா கார்டன் என்ற பட்டாசு ஏழு நிறங்களில் வெடித்து சிதறும். அது இந்த வருடம் விற்பனைக்கு வந்துள்ளது. அதனைப்போலவே கலர் சாங் என்ற பட்டாசு புஸ்வானம் போன்ற வடிவமைப்பில் உள்ளது. அது திரியில் தீயை வைத்தவுடன் புஸ்வாணம் போன்று மேலே செல்லும். அதன் பிறகு அதிலிருந்து ஒரு அற்புத இசை வருகிறது. மேலும் மேஜிக் ஷோ என்ற புத்தம் புதிய பட்டாசு வந்துள்ளது.

அது வெடித்து சிதறும் போது அதிலிருந்து பேப்பர்கள் சிதறாது. அதற்கு பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் போன்ற பணம் சிதறும். குழந்தைகளை கவரும் வகையில் ரிங் கேப் என்ற துப்பாக்கி வந்துள்ளது. அந்தத் துப்பாக்கியில் புல்லட் போடுவது போன்ற வெடிமருந்துகளை வைத்து குழந்தைகள் படித்து மகிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சில்வர் காயின் மற்றும் கோல்டன் காயின் என்ற பட்டாசுகளை வெடித்து அதில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் போன்று அதிலிருந்து ஒளி வரும். இந்தப் புத்தம் புது பட்டாசுகள் விற்பனை மிக மும்முரமாக நடந்து வருகிறது.

Categories

Tech |