திருச்சியில் மனைவியிடம் இருந்து சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர்
அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு நிரந்தர வேலை கிடைத்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜேஷ் வேலையை இழந்து வீட்டில் மனைவியின் சம்பளத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது அதன் பின் கடந்த ஏப்ரல் மாதம் ராஜேஷ் தனது மனைவியுடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார் அதன்பின் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சிவரஞ்சினியின் சொந்த சொகுசு காரில் அவரது 1 ⅕ வயது குழந்தை ,லேப்டாப் , 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார் ராஜேஷின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த சிவரஞ்சினி ஏமாற்றம் அடைந்ததை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஷ் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து உள்ளார் இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்ஜினியர் ராஜேஷை தேடி வருகின்றனர்.