அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடனின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக ஜோ பிடன் தெர்வு செய்யப்பட்டுள்ளார். 1972ம் வருடம் இளம் செனட் உறுப்பினராக ஆரம்பித்த அவரின் அரசியல் வாழ்க்கை பயணம் 48 வருடங்கள் கழித்து அமெரிக்காவின் அதிபர் என்கின்ற நிலையை அடைந்துள்ளது. இவரின் இந்த 48 வருட கால அரசியல் வாழ்க்கையில் பல இழப்புகள், பிரச்சினைகள், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளார்.
இந்த ஜனாதிபதி வெற்றிக்கு முன்னர் இரண்டு தடவை அதிபர் தேர்தலில் முயற்சித்தும் தோற்று விட்ட ஜோ பிடன் தற்போது மூன்றாவது முறை முயற்சியில் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.
ஜோ பிடன் 1972ம் வருடம் டிசம்பர் மாதம் தன்னுடைய மனைவி நெய்லியா, மகள் நவோலி, மற்றும் மகன்கள் ஹண்டர், பியோ ஆகியோர் காரில் வெளியே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு மனைவியும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவருடைய மகன்கள் மற்றும் பிடன் கடும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் மகள் பிரிவால் மன அழுத்தத்தில் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி பலமுறை டெலாவேர் ஆற்றுப் பாலத்தின் மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் தன்னுடைய மகன்கள் தான் தன்னை தற்கொலை எண்ணதிலிருந்து காப்பாற்றினர் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிடன் 1975ம் வருடம் ஜில் பிடனை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.