இன்றைய பஞ்சாங்கம்
12-11-2020, ஐப்பசி 27, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 09.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.54 வரை பின்பு சித்திரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் – 12.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். உத்தியோகத்தில் போட்டிகள் குறையும். உடல்நிலை சீராக இருக்கும். புதிய வேலைவாய்ப்பு அமையக்கூடும். வருமானம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு அதில் தேவையில்லாத குழப்பம் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் இருக்கும். தொழிலில் வீண் பிரச்சினை இருக்கும். தொழிலில் இடையூறு உண்டாகும். லாபம் உண்டாகும். தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். சிக்கனமாக இருந்தால் வீட்டில் செலவு குறையும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புலிகள் சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். லாபகரமான பலன் உண்டாகும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் வெளிவட்டாரத் தொடர்பு இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். ஆடம்பர செலவுகள் இருக்கும். சேமிப்பு குறையும். புதிய முயற்சிகளால் குடும்பத்தில் ஆதரவும் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் உள்ளவர்களுக்கு வேலைப்பளுவும் அகலும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களுடன் ஒற்றுமை இருக்கும். உறவினர் வகையில் சுபச் செய்தி இருக்கும். தொழிலில் வெளியூர் செல்ல வாய்ப்பு இருக்கும்.நண்பர்களின் ஆலோசனை வியாபாரத்தில் முன்னேற்றம் கொடுக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும்.சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலம் இருக்கும். அனுபவம் உள்ளவர்களால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த சலுகை பெறுவதற்கு அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உறவினர்களின் வருகை வீட்டிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புத்திர வழியில் சுப செய்தி இருக்கும். உத்தியோகத்தில் வேலைப் பளுவும் இருக்கும். அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். தொழிலில் புதிய முகம் அறிமுகத்தால் லாபம் கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தொழிலில் சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். உத்தியோக ரீதியில் நவீன பலனை கொடுக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன்கள் தீரும். பொன்னும் பொருளும் சேர்க்கை இருக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி இருக்கும். குழந்தைகள் வழியில் மருத்துவச் செலவு இருக்கும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை நீங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. எந்த செயலிலும் நிதானம் வேண்டும். உத்யோகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்
உங்களின் ராசிக்கு தனவரவு இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும். படத்தில் எதிரிகளாக இருந்தாலும் கூட நண்பர்களாக மாறுவார்கள். குழந்தைகளுக்கு படிப்பில் ஈடுபாடு இருக்கும். சுப காரியங்கள் கை கூடும்.