Categories
உலக செய்திகள்

கொரோனா இருந்தாலும் பரவால்ல…. செவிலியர்கள் பணிக்கு வரணும்…. சுவிஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கொரோனா பாதித்த செவிலியர்களை பணிக்கு வர அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் மருத்துவமனையில் பணி செய்ய அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பணியிலிருக்கும் செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அறிகுறி தெரிந்த முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் பணிக்கு திரும்ப முடியாது.

ஆனால் தற்போது கொரோனா பாதித்த செவிலியர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு பரவுவதற்கான  வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்று ஜெனிவா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் போதுமான அளவிற்கு பணியாளர்கள் இல்லாததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட செவிலியர்கள் பணிக்கு அனுமதிக்கப்பட்டாலும் இடைவேளை நேரத்தில் அவர்கள் காற்றோட்டமுள்ள தனி அறையில் இருந்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது.

எனவே மருத்துவமனை ஊழியர்கள் சார்பாக உள்ள யூனியன்கள் இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த செவிலியர்களை அனுமதிப்பதால் மற்ற பணியாளர்களை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று ஊழியர்களின் யூனியன்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |