Categories
தேசிய செய்திகள்

இனிமே இது கட்டாயம்… இல்லனா லைசன்ஸ் ரத்து… போலீஸ் அதிரடி அறிவிப்பு…!!!

இனிமேல் சாலையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் விதிமுறை மீறல்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பைக் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அது பழமையான சட்டம் என்றாலும் தற்போது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதனை தடுக்கும் வகையில் பெங்களூரு போலீசார் ஆலோசனை நடத்தினர். ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று விதிமுறை உள்ளது.

அதனால் மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதனைப்போலவே ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் அவர்களின் லைசென்ஸ் சில மாதங்களுக்கு பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் வாகன ஓட்டி மூன்று முறை ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் மூன்று மாதங்கள் அவர்கள் தங்கள் லைசென்சை பயன்படுத்த இயலாது. போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களை அடையாளம் கண்டு ஆர்டிஓ நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அங்கு அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்யும் வாகன ஓட்டிகளின் லைசென்சை பயன்படுத்துவதற்கு மூன்று மாதங்கள் தடை விதிப்பார்கள். இந்த புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. அதுமட்டுமன்றி விதியை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |