இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல.
அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் சொல்லுவாரு. இது விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாக நான் கருதுகின்றேன்.
விவசாயம் எப்படி இருக்கனும் கேட்டா அவருக்கு என்ன தெரியும் பாவம் ? அவர் என்ன தொழில் செஞ்சுட்டு இருக்காரு. தொழிலில் செய்யாதவர்களிடம் கேட்டால் அப்படிதான் சொல்லுவாரு. எந்த தொழிலும் செய்யாமல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தான் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.