Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8 மாதங்களுக்குப்பிறகு சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறப்பு …!!

கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வன உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வன உயிரியல் பூங்காவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கபடுவதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |