Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிழல் ‘முதல்வனை’ மிஞ்சிய நிஜ முதல்வர் …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே சாலையோரம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட முதலமைச்சர் அப்பெண்ணை அழைத்து பேசினார். அப்போது குட்டய்யபுரம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற அந்தப் பெண் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் இதனால் தமது குடும்ப ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண்ணை நிலையை அறிந்த முதலமைச்சர் அப்பெண்ணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து அரசு பணிக்கான நியமன ஆணையை உடனடியாக வழங்கினார்.

அதன்படி அப்பெண்ணிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் மாதந்தோறும் 15,000 ரூபாய் ஊதியமாக கிடைக்கும் உள்ளது. பணி நியமன ஆணையை முகமலர்ச்சியோடு பெற்றுக்கொண்ட மாரீஸ்வரி மனு அளித்த அரை மணி நேரத்திலேயே பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Categories

Tech |