பெரம்பலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்யப்பட்ட சூழலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் சாலை மங்குன் மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய பகுதிகளில் திருச்சியில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரியில் சென்ற அதிகாரிகள் மறைமுகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வெங்காய பதுக்களில் ஈடுபட்ட ரவிச்சந்திரன், முத்துச்செல்வன், அழகேசன், நடராஜன் மற்றும் வீரமணி, பாலாஜி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.