Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.

child sexual harassement க்கான பட முடிவு

 

அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் . இந்நிலையில் சிறுமி சத்தம் போட்டுள்ளாள் . இதனால்  சிறுமியை அங்கேயே விட்டு விட்டு, வினு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் , மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார்,   வினு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர் .இந்நிலையில்   பாட்டி வீட்டில்  பதுங்கி இருந்த வினுவை போலீசார் கைதுசெய்தனர் .

Categories

Tech |