ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்
தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் மீன்காட்சியகம் ,முதலைப் பண்னை போன்றவற்றையும் கண்டு களித்தனர். இந்த விடுமுறையை ஒட்டிபோலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது. .