அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பிற்கு 100 மில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வருமானம் கொடுப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர். 100 மில்லியன் டாலர்களை வருமானமாக கொடுக்க தொலைக்காட்சிகளும் புத்தக வெளியீட்டாளர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் வெள்ளை மாளிகையில் செலவிட்ட காலகட்டத்தை புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.
70 மில்லியன் வாக்குகள் உங்களுக்கு கிடைத்து இருப்பதால் அதனை புத்தகம் விற்பனையாக மாற்றி கொடுக்குமாறு புத்தக வெளியீட்டாளர்கள் கேட்கின்றனர். அதோடு ட்ரம்பை எதிர்த்துப் பேசும் புத்தகங்கள் அதிகமாக விற்கப்படுவதால் நீங்கள் மிக சிறந்த பெர்சோனாலிட்டி என கூறியுள்ளனர். இதுவரை 19 புத்தகங்களை ட்ரம்ப் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.