தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தீபாவளி தினமான நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.