Categories
மாநில செய்திகள்

டிசம்பருக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு… உயர் நீதிமன்றம் உத்தரவு… தமிழக அரசின் முடிவு என்ன?…

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் பிறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில், “தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர். ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.

அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும். அதனால் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று நீதிமன்றம் நினைக்கிறது. இதுபற்றி அரசு முடிவு செய்யும். பள்ளிகள் திறப்பது பற்றி பிற மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |