Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து… இந்தியருக்கு கிடைக்க மோடி அரசு என்ன செய்யப் போகிறது?… ராகுல் காந்தி கேள்வி…!!!

கொரோனா தடுப்பு மருந்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். அது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பைசர் நிறுவனம் நம்பிக்கையான கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியிருந்தால், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? அதனை எப்படி மக்களிடம் சேர்க்க போகிறது?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த தடுப்பு மருந்தை -70 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |