Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் அவர்களது பணத்தில் டிக்கெட் கொடுத்து உதவியுள்ளனர்.

இதனால் உதவி செய்வதில் இருக்கும் ஆழத்தை புரிந்து கொண்டு தானும் இதுபோன்று இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார். 2015 ஆம் ஆண்டு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்றிற்க்கு தலைமை ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார். அந்த பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த போது எச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் எந்த பள்ளியிலும் சேர்க்கப்படாமல் விரட்டப்படுவதை அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த குழந்தைகளை தேடி கண்டுபிடித்து அவர் பணிபுரிந்த பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

கல்விப் பணிக்கு எந்த தடங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை சேவையாக மாற்றி பயணித்து வருகிறார். பலரும் அவரிடம் திருமணம் செய்யாமல் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே என கேள்விகள் கேட்டதாக கூறும் இவர் திருமணம் முடிந்து இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு தான் அம்மாவாக இருந்திருக்க முடியும். ஆனால் இப்போது 113 மாணவர்களுக்கு தான் தான் அம்மா என பெருமையுடன் கூறுகின்றார்.

ஊரடங்கு சமயத்தில் சம்பளப் பணத்தில் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மளிகை சாமான்கள், அரிசி, நிவாரண பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். கிறிஸ்டினா பற்றி நாடோடி மக்கள் குழுவின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில் “எங்கள் மக்களிடம் கிறிஸ்டினா அவர்கள் தொடர்ந்து பேசி அவர் பள்ளியில் எங்கள் குழந்தைகளை சேர்த்தார். அதேபோன்று ராயனூர் இலங்கை முகாமிலுள்ள பிள்ளைகளையும் இதேபோன்று பள்ளியில் சேர்த்தார். முடி வெட்டாமல் போகும் மாணவர்களுக்கு அவரே மாலை நேரத்தில் முடி வெட்டி விடுவார்” என கூறியுள்ளார். கிறிஸ்டினாவின் இந்த சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |