சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
சென்னை நகர், புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வட தமிழகம் கடற்பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் அடுத்து வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.