தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதங்களுக்குப் பின்னர் தீபாவளி பண்டிகையையொட்டி மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25-ஆம் தேதி முதல் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சிரமத்தை குறைக்க இரு மாநிலங்களுக்கு கிடையேயான அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கியது. இரு மாநிலங்களுக்கு இடையே இயக்ககப்படும் பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. வரும் 16-ஆம் தேதி வரை இந்த சேவை தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பந்தன பள்ளியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.