Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூசணிக்காய்- சாமை அரிசி தோசை… செய்வது எப்படி?

பூசணிக்காய் சாமை அரிசி தோசை செய்ய தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் துருவல்                  – பெரிய துண்டு
இட்லி அரிசி                                       –  1 கப்
சாமை அரிசி                                      – 1 கப்
உளுத்தம்பருப்பு                               – 1/4 கப்
சின்ன வெங்காயம்                          – 10
காய்ந்த மிளகாய்                               – 7
எண்ணெய்                                            – தேவையான அளவு
உப்பு                                                          –  தேவையான அளவு

செய்முறை:

முதலில்  பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, சாமை அரிசியை போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

பூசணிக்காயை எடுத்து தோலை சீவிய பின்பு, நன்கு   துருவி எடுத்து  கொள்ளவும். மேலும் அதனுடன் வெங்காயத்தை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக  கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை ஊற்றி, அதில் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூசணிக்காய் துருவல், மற்றும் சிறிது  உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

மேலும்  நன்கு வதங்கிய பின்பு ஊறவைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்து மக்சிஜாரில் போட்டு நைசாக அரைத்து 7 முதல் 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.

இறுதியில் அரைத்த மாவானது  நன்கு புளித்த பின்பு, அடுப்பில் தோசைகல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து புளிக்க வாய்த்த மாவை, தோசை போல் ஊற்றி, வெந்ததும்  இரு புறமும் திருப்பி போட்டு வேக வைத்தது  எடுத்தால் சுவையான பூசணிக்காய் சாமை அரிசி தோசை ரெடி.

Categories

Tech |