கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார்.
கொரோனா நோயை சமாளிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவம் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் தொற்று நோயை சமாளிக்க உலக அளவில் கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நோய்களுக்கு எதிரான போராட்டம் சமமாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதாரத்தில் இந்தியா விற்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நமஸ்தே, பிரதமர் நரேந்திர மோடி. உலக அளவில் பாரம்பரிய மருத்துவத்தின் அறிவு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான அவைகளை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் மற்றும் அதில் நமது ஒத்துழைப்பு எவ்வாறு வழிபட வேண்டும் என்பது பற்றி நீங்கள் மேற்கொண்ட மிகவும் அர்த்தமுள்ள உரையாடலுக்கு நன்றி” என்ற அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதை பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை அவர் பாராட்டியுள்ளார்.