Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்து நிறைந்த… கேரட் பால்…!!!

கேரட் பால் செய்ய தேவையான பொருட்கள்:

பால்                                     – 1 லிட்டர்,
நாட்டு சர்க்கரை             – 125 கிராம்,
ஏலக்காய்                           – 5 எண்ணம்,
கேரட்                                    – 150 கிராம்

செய்முறை:

முதலில் கேரட்டை எடுத்து துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து, சாறு எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,அதில்  பாலை  ஊற்றி நன்கு  கொதிக்க வைக்கவும்

மேலும், நன்கு பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது, சூடான பாலில் கரண்டியை வைத்து நன்கு கலக்கி கொண்டே இருக்கும் போது, அதில் அரைத்த கேரட் சாற்றை சேர்க்கவும்.

பின் கேரட்டானது நன்கு கொதிக்கும் போது, அதிலுள்ள சாறு இறங்கி பாலுக்கு நல்ல  நிறத்தை கொடுக்கிறது. பின்பு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டால் நல்ல நறுமணமும்,சுவையும் தரும்.

பின்பு, கொதித்த பாலை இறக்கி, ஆற வைத்த பின்பு நன்கு வடிகட்டியதும்  பேக்கிங் செய்து, குளிர் சாதன பெட்டியில் வைத்து, குளிர்ச்சியாக  பருகலாம்.

Categories

Tech |