பற்களின் ரத்த கசிவை சரி செய்ய சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
பல் பராமரிப்பு :
உங்கள் ஈறுகளின் பிரச்சினையை சரியாகக் கண்டறிந்து, பின்பு அதனை சரி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் பல் மருத்துவரை சந்தித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர், உங்களுக்கு இதற்கான சிறந்த ஆலோசனையை தருவார். அதிர்ஷ்டவசமாக, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் வீக்கத்தைத் தடுப்பதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. மேலும், இந்த வைத்தியங்கள், திறம்பட செயல்படக் கூடியவை. இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை தவறாமல் படியுங்கள்.
கிராம்பு எண்ணெய் :
சிறந்த வீட்டு வைத்தியம் ஆக கருதப்படும் இந்த கிராம்பு எண்ணெய், ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது; மற்றும் ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கை பெரிய அளவில் தடுக்கிறது. நீங்கள், சிறிது கிராம்பு எண்ணெயை எடுத்து உங்கள் ஈறுகளில் தேய்க்கலாம். அல்லது ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை எடுத்து உங்கள் வாயில் போட்டு மெல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் சிறிது எரியும் உணர்வை உணரலாம். ஆனால், அது வீக்கத்தை பெரிய அளவில் குறைக்கும்.
உப்பு தண்ணீர் கொண்டு உங்கள் வாயை கொப்பளிக்கவும்:
ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கை சரி செய்வதற்கு மிக எளிதான மற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் என்ன என்று பார்த்தல், அது உப்பு தண்ணீரில் உ ங்கள் வாயை கொப்பளிப்பது தான். சிறிது மந்தமான தண்ணீரை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் வாயை கொப்பளியுங்கள். வாயை கொப்பளிப்பதற்கு முன்பு, அந்த தண்ணீர் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், சூடான தண்ணீர் ஆனது, உங்கள் வாயை சுட்டெரித்து விடும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை சரி செய்யலாம்.