கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியில் மக்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்களிடம் கொரோனா பற்றி அச்சம் குறைந்துள்ளது. மேலும் பண்டிகை காலம் நெருங்கிவிட்டதால் சாலை மற்றும் கடைகளில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடுகிறது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி இன்று நடந்தது.
அதில் முக கவசம், கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அங்கு கண்காட்சிக்கு வரக்கூடிய மக்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்றில் இடம் பெற்றுள்ள கொரோனா அரக்கி ஓவியம் மக்களை கவர்ந்துள்ளது.