Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சீஸ் கட்லெட்… ட்ரை பண்ணி பாருங்க..!!

சீஸ் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

வெட்டிய  சீஸ்                  – 1 கப்
உருளைக்கிழங்கு          – 2
வேகவைத்த கரட்           – 4
உப்பு                                       – தேவையான அளவு
மிளகுத்தூள்                       – சிறிதளவு
முட்டை                               – 1
பிஸ்கட் தூள்                     – 100 கிராம்

செய்முறை:

முதலில், அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் உருளைக்கிழங்கு, கேரட்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து அதன் தோலை உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.  பின்பு அதனுடன் உப்பு, மிளகுத்தூளை சேர்த்து  நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்பு சீஸை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறு உருண்டைகளாக உருட்டிய பின்பு,  அதன்  நடுவில் ஒரு துளை போட்டு, அதில் ஒரு துண்டு சீஸ் போட்டு, உருண்டையாக மீண்டும் செய்து கொள்ளவும்.

அதனையடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் காய்ந்ததும், அதில் செய்து வைத்த உருண்டைகளை முட்டையில் நனைத்தப்பின் பிஸ்கட் தூளில் விரவி எடுத்து அதை கொதிக்கும் எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சீஸ் கட்லெட் ரெடி.

Categories

Tech |