தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.