அச்சு முறுக்கானது தீபாவளி பலகாரங்களில்இதுவும் ஒன்று. இந்த முருக்கானது இலேசான இனிப்புடன் கூடிய சுவைமிகுந்த காணப்படுவதால் இது அதிக இடங்களில் கிடைப்பதால் இதனை “அச்சப்பம்” என்றும் ” ரோஸ் குக்கி” என்றும் அழைக்கப்படுகிறது.இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம்.
அச்சு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 1 கப்
மைதா – 1/4 கப்
முட்டை – 4
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் தேங்காயை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, பின் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்ததும், அரிப்பில் ஊற்றி நன்கு அரித்து கொள்ளவும்.
பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவை நன்கு சலித்து எடுத்து கொள்ளவும். அதனுடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் அரித்த தேங்காய்ப்பால்,சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு தோசை மாவு பதத்திற்குக் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சை எடுத்து காய்ந்த எண்ணெயில் ஒரு நிமிடம் வைத்த பின்பு, கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கும் போது மாவானது, அச்சு சூட்டில் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
மேலும் அச்சில் உள்ள மாவானது திருப்பி போடும் போது, காய வைத்துள்ள எண்ணெயில் நன்கு மூழ்கும்படி அச்சை வைக்கவும்.
சிறிது நேரத்தில் மாவு வெந்தவுடன் அச்சிலிருந்து மாவானது பிரிய தொடங்கும் பொது இலேசாக அச்சை உதறி எடுத்தால், முறுக்கு தனியாக எண்ணெயில் விழுந்து விட்ட பின்பு, அதை பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுத்து, சிவப்பாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும். இதை ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக வைக்கவும்.