சிறு மற்றும் குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதியும் மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மொத்தம் பதினோரு மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக 3,621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி ரீபண்ட் ஆக 1.32 லட்சம் கோடி ரூபாய் 39 இலட்சம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ரோஜார் புரோட்ஷகான் யோஜனா திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. அது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். அந்தத் திட்டம் 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சலுகைகள் கட்டாயம் கிடைக்கும். அதில் சேர்ந்த 1,52,899 நிறுவனங்களில் பணிபுரியும் 1,21,69,960 பேருக்கு 8300 கோடி ரூபாய் அளவில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சிறு குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதி வரும் மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்ற நிலையில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு ‘ஆத்ம நிற்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.