ஆப்பிள் டீ செய்ய தேவையான பொருள்கள்:
ஜஸ் கட்டி – தேவையான அளவு
ஆப்பிள் – 1
எலுமிச்சை பழம் – தேவையான அளவு
சீனி – தேவையான அளவு
செய்முறை:
முதலில் 1 லிட்டர் தண்ணீரில், 2 டேபிள் ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின் வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.
பின்னர் ஒரு டம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டையும் சம அளவில் ஊற்றவும். பின் அதில் சிறிது ஐஸ் கட்டி, ஒரு டீஸ்பூன் சீனி, எலுமிச்சை பழ சாறு ஊற்றி நன்றாக கலந்த பின் பரிமாறினால் சுவையாக இருக்கும்.