Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அறிவிப்பு… விளக்கம் அளித்த மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. அதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் குறிப்பாக டெல்லி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவதாக வெளி வந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. அதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |