பச்சை பயறு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு – 2 கப்
இட்லி அரிசி – 2 கப்
உளுந்து – 1 கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேறப
செய்முறை:
முதலில், பாத்திரத்தில் பச்சைப்பயிறு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். பின்பு உளுந்தை மட்டும் எடுத்து, மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
மேலும், மிக்சி ஜாரில் இட்லி அரிசி மற்றும் பச்சைப்பயிறு, வெந்தயத்தை சேர்த்து ஒன்றாக போட்டு அரைத்ததுடன் உளுந்த மாவை போட்டு உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரம் நன்றாக புளிக்க வைக்கவும்.
அதனையடுத்து புளிக்க வைத்த மாவானாது, நன்கு பொங்கி வந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்ததும், அடுப்பில் இட்லி தட்டை வைத்து, அதில் பிசைந்த மாவை ஊற்றி, நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான பச்சைப்பயிறு இட்லி தயார்.