இனிப்பில்லாத கோவா – 1/4 கிலோ, சர்க்கரை – 750 கிராம், மைதா – 60 கிராம்,
ஆப்ப சோடா – 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்.
தண்ணீர் – 600 மி.லி
செய்முறை :
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, பின்பு இறக்கி ஆற வைக்கவும்.
மேலும் மற்றோரு பாத்திரத்தை எடுத்து அதில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்த பின்பு சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்து, 5 நிமிடம் கழித்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அதனையடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த உருண்டைகளை எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுத்து சர்க்கரை பாகுவில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான காலா குலாப் ஜாமுன் ரெடி.