இறால் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
தோல் உரிக்கப்பட்ட இறால் – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 2
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, மிளகு – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
ரம்பை – ஒரு துண்டு
இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
நறுக்கப்பட்ட பூண்டு – சிறிதளவு
முட்டை – 2
பிஸ்கட் தூள் – 100 கிராம்
செய்முறை:
முதலில் இறாலை எடுத்து தோலை நீக்கி, சுத்தம் செய்த பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் இறாலை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் உற்றி அவிக்கவும். அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்கையும் போட்டு தனியாக அவிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாகும்போது, பூண்டு, வெங்காயம், ரம்பை, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து, தாளித்த கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, அதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு இலவங்கப்பட்டை மற்றும் ரம்பையை அந்த கலவையிலிருந்து அகற்றி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக மாவை எடுத்து, அதன் நடுவில் ஒவ்வொரு இறாலை வைத்து உருண்டை செய்து முட்டையில் நனைத்து கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான இறால் கட்லெட் ரெடி.