Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்‍கு வாய்ப்பு …!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்து இடைவெளி விட்டு மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Categories

Tech |