பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் வெளியேற வேண்டுமென்றும் திரு. தேஜாஸ்ரீ யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியது. அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. 74 இடங்களை கைப்பற்றி பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. பாஜகயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த முதலமைச்சர் திரு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவை விட குறைவான இடங்களையே பெற்றது. இருந்தபோதிலும் ஆட்சியை தக்கவைக்க நிதிஷ்குமாரை முதலமைச்சராக இருப்பார் என்றும் பாஜக அறிவித்தது.
இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும் திரு. தேஜாஸ்ரீ யாதவ் முதலமைச்சராக ஆதரவு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பாஜக மதவாத அரசியலுக்கு நிதிஷ்குமார் ஆதரவு தரக்கூடாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவித்துள்ளார்.