Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குப்பைகளை சேகரிக்க 36 பேட்டரி வாகனங்கள் “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அசத்தல் தொழில்நுட்பம்!!…

வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும்  முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது .

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க  செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் இரண்டு கோடி செலவில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர் நகராட்சியில் குப்பை ஆனது 5 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டப்படுகிறது அவ்விடங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து 30 டன் உரங்களை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் வீடுவீடாக குப்பைகளை சேகரிக்கும் இந்த திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக மாறும் என்றும் இத்திட்டத்தை மே 5 முதல் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |