கடலை மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்:
வெல்லம் – 1 கிலோ
நிலக்கடலை – 200 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
தேங்காய் துருவல்- அரை கப்
ஏலக்காய் பொடி – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, அதில் நிலக்கடலையை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லதை போட்டதும், சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு பாகு நன்கு காய்ச்சதும், இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக் கொள்ளவும் .
பிறகு கொதிக்க வைத்த கலவையானது நன்கு கெட்டியாக, மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை தட்டில் கொட்டி ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான கடலை மிட்டாய் தயார்.