Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (14-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

14-11-2020, ஐப்பசி 29, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.18 வரை பின்பு அமாவாசை.

சுவாதி நட்சத்திரம் இரவு 08.09 வரை பின்பு விசாகம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

சர்வ அமாவாசை.

தீபாவளி பண்டிகை.

ல-க்ஷ்மி குபேர பூஜை.

லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

கேதார கௌரி விரதம்.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  14.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் துணிவுடன் செய்வீர்கள். உதவிகள் கிடைத்த நேரத்தில் அமையும். தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். கடன்கள் அனைத்தும் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வீட்டில் நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு உண்டாகும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெரியவர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். உடன்பிறந்தவர்களின் அனுகூலம் கிடைக்கும். பொண்ணு பொருள் அமையும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பலவீனமாக காணப்படும் நாளாக இருக்கும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.புதிதாக வீதியில் தடைகள் இருந்தாலும் லாபம் உண்டாகும். தொழிலில் பிரச்சினை இருந்தாலும் ஓரளவுக்கு தீரும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சற்று மந்தநிலை இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதம் ஆகும். கடன் தொல்லை தீரும். தொழில் ரீதியில் சிறப்பு அடைவீர்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சிறப்படைந்து சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சனை நீங்கும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். சிவாய முயற்சியால் வீட்டில் வெற்றி கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு உண்டாகும். உத்தியாக ரீதியில் ஒப்பந்தம் உண்டாகும். வருமானம் கூடும்.

கன்னி

உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகளைத் தொடங்க அனுகூலமாக நாளாக இருக்கும். குழந்தைகள் வழியில் பெருமை இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிதாக வளர்ச்சிக்காக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த கடன் தொல்லை தீரும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீட்டில் தேவையில்லாத மனஸ்தாபம் உண்டாகும். மன நிம்மதி அகலும். உற்றார் உறவினர் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனை நம்பிக்கையைக் கொடுக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிவ காரியங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியில் வெளிவட்டார நட்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் இலாபகரமான பலன் அடையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.உத்தியோகம் சம்பந்தமாக கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலைப்பளு நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். சுப  செய்திகள் அமையும்.சிக்கனமாக இருந்தால் பொருளாதார நெருக்கடி நீங்கும். நண்பர்களின் மகிழ்ச்சி அளிப்பார்கள்.கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும் அதுவே நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும் அதுவே நல்லது. சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.

Categories

Tech |