பிரெட் சென்னா சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள் :
சீஸ் துண்டுகள் – 10
வேகவைத்த சென்னா – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
கரம் மசாலாதூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
தக்காளி சாஸ் – சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் குக்கரை வைத்து அதில் சென்னாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும் மூடி வேகவைத்து கொள்ளவும்.
மேலும் வேக வைத்த சென்னாவை மிக்சி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், குடை மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு பச்சை வாசம் நீங்கியதும், அதில் அரைத்த சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ளவும்.
மேலும் இறக்கிய கலவையானது சூடு ஆறியதும், அதை நன்கு பிசைந்து நீள் வாக்கில் உருட்டி, 10 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். பின்பு அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.
பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், அதில் பிரெட் ரோலை வைத்து, இரு புறமும் கருகாமல் புரட்டி, வேக வைத்து எடுத்ததும், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறினால் சுவையான பிரெட் சென்னா சீஸ் ரோல் தயார்.