Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு அனுமதியில்லை…. மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு…!!

அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவில்களுக்குள் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 5000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா நவம்பர் 20 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்நிலையில் தீபத் திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபத் திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை. 29ஆம் தேதி காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கோவிலில் வழிபாடு நடத்த நாளொன்றுக்கு 5000 பேருக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |