குருணால் பாண்டியா அளவுக்கு அதிகமான தங்கத்தைத் கொண்டு வந்ததற்காக அபராதம் கட்டி மும்பை விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.பின் அந்த அணியினர் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பினர். மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான குருணால் பாண்டியாவிடம் கடிகாரம், அளவுக்கதிகமான தங்கம் உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் விதிகள் தெரியாமல் கொண்டு வந்து விட்டதாகவும் இனி இது போல் நடக்காது , அபராதம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிவிடுகிறேன் என்றும் கூறியுள்ளார். எனவே அவருக்கு வருவாய் புலனாய்வுத்துறை அபராதம் விதித்தது. மும்பை விமான நிலையத்தில் இருந்து அபராதத்தை கட்டிய பின்னரே குருணால் பாண்டியா விடுவிக்கப்பட்டார்.