Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிகுந்த… பன்னீர் பெப்பர் பிரை…!!!

பன்னீர் பெப்பர் பிரை செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர்                                        – 200 கிராம்                                                                                                                                      சோளமாவு                               – 25 கிராம்
தேங்காய் எண்ணெய்          – 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு நறுக்கியது – 25 கிராம்
வெங்காயம்                              – 1 பெரியது
கறிவேப்பிலை                        – சிறிதளவு
பச்சை மிளகாய்                       – 2
நொறுக்கிய மிளகு                  – 20 கிராம்
உப்பு                                                – சுவைக்கேற்ப
கொத்தமல்லி                             – ஒரு கட்டு
எலுமிச்சை சாறு                       – 1 தேக்கரண்டி
எண்ணெய்                                    – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் பன்னீரை துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மேலும் பாத்திரத்தில் சோள மாவை போட்டு,அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

அதனை அடுத்து, கடாயை அடுப்பில் வைத்துஅதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய  பன்னீர் துண்டுகளை எடுத்து கரைத்த சோளமாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டு நன்குப் பொரித்து எடுத்து கொள்ளவும்.`

பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கியபின், அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு  சேர்த்து கொத்தமல்லிதழையை சேர்த்து இறக்கி பரிமாறினால் சுவையான சுவையான  பன்னீர் பெப்பர் பிரை தயார்.

Categories

Tech |