கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத பொருள்வரவு இடமுண்டாகும்.
வழக்கமான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். தொலைபேசி மூலம் மகிழ்ச்சிகரமான சம்பவம் நடக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைய நாள் மனதில் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ரொம்ப நல்லது. சகோதரர்களால் ஆதாயம் அடையக்கூடும்.
மனைவி வழியில் ஆதாயம் வந்து சேரும். சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய பதவிகள் பெறுவீர்கள். தாய் தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். மாணவக் கண்மணிகள் வெடி வெடிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி திருநாள் அன்று அனைத்து கஷ்டங்களையும் மறந்துவிட்டு மகிழ்ச்சியாக திருநாளை கொண்டாட வேண்டும்.
முடிந்தால் நீங்கள் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இல்லையெனில் உங்களிடம் இருக்கும் புதிய ஆடையை மகிழ்ச்சியாக அணிந்து திருநாளை கொண்டாடுங்கள். காலையில் எழுந்ததும் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.