பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து நாட்கள் செல்ல செல்ல இருவரும் செல்போன் நம்பரை கொடுத்து பேசி வந்துள்ளனர்.
அதன்பின்னர் அனுசியா காதலிப்பது போல் பேசியதை நம்பிய மருதுபாண்டியன், அவர் கேட்கும் போதெல்லாம் 30 லட்சம் ரூபாய் வரைக்கும் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மருது அனுசியாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், அவருடைய முகவரியை வைத்து அனுசியா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவை தட்டியதில், 40 வயதுடைய பெண் ஒருவர் கதவைத் திறந்தால் மருதுபாண்டியன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் முகநூல் பக்கத்தில் இருந்த பெண் வேறு இவர் வேறு என்பதால் அவர் குழப்பத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருது பாண்டியன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரித்தபோது அந்த பெண் அனுசுயா தான் ஆனால் முகநூல் பக்கத்தில் இருப்பது அவருடைய படம் அல்ல வேறு பெண்ணுடைய படத்தை வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவருடைய கணவர் மற்றும் கணவரின் தம்பி என்பதால் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பேஸ்புக் முகநூல் பக்கத்தில் வைத்திருந்தது பிரியா என்பவரின் புகைப்படம் என்பதால் அவர் காவல் நிலையத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக புகார் அளித்துள்ளார்.